சுடச்சுட

  

  'மாத்தி யோசிச்சோம் பாஸ்': உத்தரப்பிரதேச மக்களின் மைன்ட் வாய்ஸ் இதுவா?

  By DIN  |   Published on : 11th March 2017 03:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  UP_elections


  லக்னௌ: மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதியான உத்தரப்பிரதேசத்தில் இழுபறி நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

  சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடியின் கரிசனத்தால், உத்தரப்பிரதேசத்தில் தாமரை மலர்ந்துள்ளது.

  கடந்த காலங்களில் ஆளுமை செலுத்தி வந்த சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  இது குறித்து பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், உத்தரப்பிரதேசத்தில் 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் வெற்றியை விடவும் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது என்றார்.

  மேலும் அவர் பேசுகையில், இந்தியாவின் பரிசோதனைக் கூடம் போன்றது உத்தரப்பிரதேச மாநிலம். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வேலை செய்துள்ளது. மோடியின் தலைமையை எண்ணி பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

  உத்தரப்பிரதேசத்தின் பெரிய நகரங்களில் பாஜக பெற்ற வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது. லக்னெவில் 8ல் 5, கான்பூரில் 10ல் 8, அலகாபாத்தில்12ல் 9 நகரங்களை பாஜக கைப்பற்றியது.

  தேர்தல் நிலவரம் குறித்து தற்போதைய முதல்வராக இருக்கும் அகிலேஷ் யாதவிடம் இருந்து எந்த கருத்தும் வரவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

  இதற்கு எல்லாம் மேலாக, ரூபாய் நோட்டு விவகாரத்தால், பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க, பாஜக அரசு எடுத்த மிகப்பெரிய முயற்சியாக மக்களால் இது அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவே, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் நினைத்ததுக்கு மாறாக மாத்தி யோசித்துவிட்டார்களோ வாக்காளர்கள்?

  என்னதான் கால் கடுக்க ஏடிஎம் வாயிலில் நின்றாலும், எல்லாம் நமக்காகத்தான், நாட்டின் நலனுக்காகத்தான் என்று மக்கள் நேர்மறையாக சிந்தித்திருக்கிறார்களா? இல்லை தேர்தல் நேரத்தில் பணப் பிரச்னை தீர்ந்துவிட்டதால் அது தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்று எடுத்துக் கொள்வதா என்ற கேள்வியும் ஆழ்மனத்தில் கேட்கத்தான் செய்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai