சுடச்சுட

  
  parli

  ராணுவ வீரர்கள் விவகாரம், காஷ்மீர் விவகாரம் மற்றும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 3 மாதங்களாக மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு மத்தியில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துடன் பாஜகவின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த மாநிலங்களை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துடன் அதிரடி திட்டங்களுக்கு 5 மாநில மக்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்கள்.

  ராணுவ வீரர்கள் விவகாரம், காஷ்மீர் விவகாரம், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு பின்பும், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு இது முன்னோட்டமாகவும், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முக்கியத்துவம் அளிக்கும் தேர்வாக உத்திரப் பிரதேசம், உத்தரகண்டில், பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

  இதையடுத்து 5 மாநிலங்களிலும் மாநிலத்தில் ஆளும் கட்சிகளும், மத்தியில் ஆளும் கட்சிகளுக்குமிடையே கடும் போட்டிகள் நிலவி வந்தது.  

  இந்நிலையில், சைக்கிள் யாருக்கு சொந்தம் என போட்டி போட்டு வந்த தந்தை-மகனின் குடும்ப சண்டைகளும் ஆளும் சட்சியான சமாஜ்வாதி கட்சியில் அரங்கேறியது. ஒரு வழியாக சைக்கிள் எனக்கே என கூறிய அகிலேஷ் யாதவுக்கு கட்சியினரிடையே செல்வாக்கு பெருகியது. இதையடுத்து பட்டின்ற பஞ்சாயத்தில் மகனுக்கே சைக்களை தள்ளிவிட்ட முலாம்சிங், கட்சி பணிகளில் இருந்தும் பிரசார பணிகளும் ஒதுங்கியே இருந்து வந்தார்.

  குடும்ப சண்டையை வாய்ப்பாக கருதிய பாஜக, உ.பி.யில் தாமரை மலரவும், சைக்களை பஞ்சராக்கும் பணிகளுக்கு திட்டமிட்டதுடன், இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வேளை மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டால், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரின் ஆட்சியின் திட்டங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என கருதிய பாஜக, உத்தரப்பிரதேச மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக 24 இடங்களில் பிரதமர் நரேந்த மோடி தீவிரப் பிரசாரம் செய்தார். பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷாவின் மேற்பார்வையில் பல அதிரடி மாற்றங்களும் கண்காணிப்பு வேலைகளையும் செய்யப்பட்டு வந்தன.

  இவர்களின் தீவிரப் பிரசாரங்களுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள 403 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் கடந்த 8-ஆம் தேதி வரையிலும் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. உத்தரகண்டில் (70 தொகுதிகள்) கடந்த மாதம் 15-ஆம் தேதியும், பஞ்சாப் (117) மற்றும் கோவா (40) ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் 4-ஆம் தேதியும், மணிப்பூரில் (60) கடந்த 4 மற்றும் 8-ஆம் தேதியன்றும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

  இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் உத்திரப்பிரதேசம், கோவா மாநிலங்களில் தொங்கு பேரவை உருவாகும் என்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், உத்தரகாண்டில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் எனவும் கருத்து கணிப்பில் கூறப்பட்டது.

  5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் சாமியர்களெல்லாம் தெரிவித்து வந்தனர். அதுவும், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 52 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அரியணையில் பாஜக அமரும் எனவும், மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஆருடம் வாசித்தார்கள்.

  இந்நிலையில், 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. இதில், உத்திரப் பிரதேசம், உத்தர கண்ட் மாநில தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறது. பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறது.

  தோல்வியால் யாருக்கு பாதிப்பு?
  245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 59 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 56 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியை பொருத்து மாநிலங்கள் அவையில் இரு கட்சிகளின் பலம் வரும் காலத்தில் அதிகரிக்கும்.

  தேர்தலில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்கு 31 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது, அந்த மாநிலத்தில் இருந்து பாஜகவுக்கு 3 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளார்கள். அதே போன்று பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் இருந்து 12 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

  5 மாநில தேர்தல் முடிவுகளின் படி உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் ஆட்சி அதிகாரத்தை பெற்றும், பஞ்சாப்பில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தும் மற்ற 2 மாநிலங்களில் இரண்டாவது இடத்தையும் பாஜக பிடித்துள்ளது.

  இதையடுத்து மாநிலங்களவையில் பாஜக செல்வாக்கு உயர்ந்துள்ளது என்று கூறலாம். குடியரசுத்தலைவர் தேர்வுக்கும் வலு சேர்த்துள்ள இந்த தேர்தல் முடிவுகள். மேலும், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பலம் அதிகமாக இருந்துவந்ததால், மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வரும் மசோதாவிற்கு, பெரிய தடங்கள்கள் ஏற்பட்டு வருந்தது. இந்த 5 மாநில தேர்தலின் முடிவுகளின் படி, பாஜக 2 மாநிலங்களில் ஆட்சியையும், 2 மாநிலங்களில் எதிர்க்கட்சி வரிசையும் பெற்றதையடுத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் போதிய உறுப்பினர்களை பெற்று உள்ளது.

  தாமரை மலர்ந்தது: உத்திரப்பிரேத மாநிலத்தில் பெரும்பான்மை வெற்றியை பெற்றதற்கு உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமித்தது. யாதவர் அல்லாத, ஜாட் இனத்தவர் அல்லாத 170 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கி வாக்கு வங்கியை முழுமையாக பயன்படுத்தியது. சிறு கட்சியுடன் கூட்டணி வைத்தது. பிரசாரத்தின்போது தாக்கூர் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரசாரம் செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ப்ரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்தது.

  குறிப்பாக, எந்த பகுதிகளில் கட்சி வீக்காக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்கள் கவர்ந்து வந்து இறக்கப்பட்டது. இந்துத்துவா வாக்குகளை ஒன்றிணைப்பதற்காக, குறிப்பிட்ட தொகுதிகளில் இந்துத்துக்களின் வாக்குகளை ஒன்றிணைப்பதற்காக முஸ்லிம் ஒருவருக்கு கூட போட்டியிட வாய்ப்பு கொடுக்காதது. மோடியும், அமித்ஷாவும் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திரள செய்யும் வகையிலான பிரசாரத்தை மேற்கொண்டது. சாதிகள் நிறைந்த உ.பி.யில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் தேர்தலை சந்திதத்ததே பாஜகவுக்கு கூடுதல் பலம் என்றும் அப்படி முதல்வர் வேட்பாளரை அறிவித்திருந்தால் பெரும்பாலான ஜாதியினர் ஜகா வாங்கியிருப்பார்கள் என்பதே பாஜகவின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்தது என்ற கூறலாம்.

  சைக்கிள் பஞ்சரானது: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி அரசுக்கு எதிராக மக்களிடையே எழுந்த கோபமும் பாஜக வெற்றிக்கு ஒரு காரணம். தந்தையும் மகனுக்கிடையே கட்சிக்கான குடும்ப சண்டையில் சைக்கிள் யாருக்கு சொந்தம் என்ற பட்டிமன்ற வழக்கால் மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை. குடும்ப சண்டையில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி நடுவே புரிதல் இல்லாமல் போனது. சில தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி செயல்பட்டது போன்றவையே 15 ஆண்டுகளாக பயணித்து வந்த சைக்கிள் பஞ்சரானதிற்கு காரணம் என்று கூறலாம்.

  எது எப்படியோ, ராணுவ வீரர்கள் விவகாரம், காஷ்மீர் விவகாரம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை, சமையல் எரிவாயு விலை ஏற்றம், மாத மாதம் பொட்ரோல், டீசல் விலையில் மாற்றம், வங்கிகளின் அதிரடி கட்டுப்பாடுகள், விவசாயிகளுக்கான நடவடிக்கை மற்றும் கல்விக் கடன், மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் எண்களை கட்டாயமாக்கியது. மத்திய அரசின் உதவிகள் பெறுவதில் ஏற்பட்ட அவஸ்தகளை எல்லாம் மறந்து மண்ணித்து 5 மாநில மக்கள் பாஜகவின் தாமரை மலர வைத்துள்ளனர்.

  இதைவிட கொடுமை மணிப்பூரில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவரும் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளாவுக்கு நோட்டாவிற்கு அளித்த 143 வாக்குகளை விட, வெறும் 90 வாக்குளை மட்டுமே அளித்து தோல்வியை தழுவச் செய்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai