சுடச்சுட

    

    மானேசர் கலவரம்: மாருதி நிறுவன ஊழியர்கள் 31 பேர் குற்றவாளிகள்

    By DIN  |   Published on : 11th March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணா மாநிலம், மானேசர் பகுதியிலுள்ள மாருதி சுஜுகி நிறுவனத்தில் கடந்த 2012-இல் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் அந்த நிறுவன ஊழியர்கள் 31 பேர் குற்றவாளிகள் என குருகிராமம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    குருகிராமம் (குர்கான்) மாவட்டம், மானேசர் பகுதியில் மாருதி சுஜுகி இந்தியா நிறுவனத்தின் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆலை ஊழியர்கள் சிலர் கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18-ஆம் தேதி அந்த ஆலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது, அந்த ஆலையின் ஒரு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், அங்கு பணியாற்றி வந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனீஷ் குமார் தேவ் உயிரிழந்தார். மேலும், வெளிநாட்டினர் உள்ளிட்ட 100 ஊழியர்கள் காயமடைந்தனர்.
    இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, ஆலையில் பணிபுரிந்த 148 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
    இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.கே.கோயல் வெள்ளிக்கிழமை அளித்தார்.
    இதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 148 பேரில் 117 பேர் விடுவிக்கப்பட்டனர். தொழிலாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த 13 நபர்கள் உள்ளிட்ட 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
    மேலும், இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai