சுடச்சுட

    

    மேற்கு வங்க அமைச்சர்களுக்கு இரு மடங்கு ஊதிய உயர்வு: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 11th March 2017 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு வங்க முதல்வர், அமைச்சர்களின் ஊதியத்தை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்த வகை செய்யும் மசோதா, அந்த மாநில பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
    மேற்கு வங்க ஊதியங்கள், படிகள் சட்டத் திருத்த மசோதா-2017 என்ற அந்த மசோதாவை, மாநில பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார்.
    அமைச்சர்களின் மாத ஊதியத்தை ரூ.36,800-இல் இருந்து ரூ.81,300-ஆக உயர்த்த வகை செய்யும் இந்த மசோதாவால், முதல்வர், இதர அமைச்சர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவர், துணைத் தலைவர், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் பயனடைவார்கள் என்று பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார். பின்னர், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
    இதேபோல, பேரவை உறுப்பினர்களின் மாத ஊதியத்தை ரூ.5,000-இல் ரூ.10,000-ஆக உயர்த்த வழிசெய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. வரும் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரவிருக்கிறது.
    இதனிடையே, ஊதிய உயர்வில் அமைச்சர்களுக்கும் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகவும், அதனை ஏற்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai