சுடச்சுட

  
  vijay_mallaya

  ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனை ஒரே தவணையில் செலுத்துவது தொடர்பாக வங்கிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
  பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் ஏய்ப்பு செய்துவிட்டு, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையா, இதுதொடர்பாக, தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது:
  அரசின் பொதுத் துறை வங்கிகள், கடன்களை ஒரே தவணையில் வசூலிக்கும் கொள்கையை வைத்திருக்கின்றன. அதன்படி, நூற்றுக்கணக்கான கடனாளிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன்தொகையை ஒரே தவணையில் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?
  கடனை ஒரே தவணையில் செலுத்த விரும்பும் எங்களது கோரிக்கையை, எங்களது கருத்தை கேட்காமலே உச்ச நீதீமன்றத்தில் வங்கிகள் நிராகரித்துவிட்டன. எனவே, நியாயமான அடிப்படையில், கடனை ஒரே தவணையில் செலுத்துவது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்.
  இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  ஒவ்வொரு தனி நீதிமன்ற உத்தரவுக்கும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கட்டுப்பட்டு வருகிறேன். ஆனால், நியாயமான முறையில் விசாரணை நடத்தாமல், என்னைக் குற்றவாளியாக சித்திரிக்க அரசு முயலுவதுபோல் தெரிகிறது.
  உச்ச நீதிமன்றத்தில் எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் முன்வைத்தது, எனக்கு எதிரான அரசின் மனநிலையையே நிரூபிக்கும் வகையில் உள்ளது என்று மல்லையா தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
  மல்லையாவுக்கு எதிரான கடன் ஏய்ப்பு வழக்கில் சொத்து விவரங்களை நேர்மையாக அளித்தீர்களா? என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai