சுடச்சுட

    

    வறட்சியைச் சமாளிக்க தமிழகத்துக்கு போதிய நிதியுதவி அளிக்கப்படும்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 11th March 2017 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    central_government

    வறட்சியை சமாளிப்பதற்காக, தமிழகத்துக்கு போதிய நிதியுதவி விரைவில் அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
    இதுதொடர்பாக, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின்போது அதிமுக எம்.பி. ஏ.விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியதாவது:
    தமிழகத்தில் 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக மாநில அரசு அறிவித்துள்ளது.
    அங்கு வறட்சி பாதிப்பை மதிப்பிடுவதற்காக, மத்தியக் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது.
    அந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மீது விவாதிக்க உயர் நிலைக் குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது.
    அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று கருதுகிறேன்.
    அதன்பிறகு, இயற்கைப் பேரிடர் நிவாரண விதிமுறைகளின்கீழ், தமிழகத்துக்கு போதுமான நிதியுதவி அளிக்கப்படும் என்றார் ராதாமோகன் சிங்.
    மற்றொரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், "மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின்கீழ், தமிழகத்துக்கு 2016-17ஆம் ஆண்டில் ரூ.713 கோடி ஒதுக்கப்பட்டது.
    இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.534.75 கோடியாகும். மீதமுள்ள 178.25 கோடி மாநில அரசின் பங்களிப்பாகும்.
    மத்திய அரசின் பங்களிப்பான ரூ.534.75 கோடி நிதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வறட்சியும், குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவி வரும் சூழலில், வறட்சியை சமாளிக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai