சுடச்சுட

    

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th March 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    trichy_siva

    நெடுவாசல் கிராமப் பகுதியில் உத்தேசிக்கப்பட்டுள்ள "ஹைட்ரோ கார்பன்' எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
    இது குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை:
    மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் "ஹைட்ரோ கார்பன்' எரிவாயு எடுப்பது குறித்து ஆய்வு நடத்தவும், திட்டத்தை மேற்கொள்ளவும் அண்மையில் முன்மொழிந்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஏற்படும் சமூக சுற்றுச்சூழலின் தாக்கத்தையும் கருத்தில் கொள்வது அவசியம். "ஹைட்ரோ கார்பன்' திட்டத்துக்கு அனுமதி அளிப்பது விளைநிலங்களுக்கு மிகப்பெரிய தீங்கிழைக்கும்.
    புதுக்கோட்டை மண்டலமானது காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஒன்றாகும். வேளாண்மை உற்பத்தி அதிகம் நடைபெறும் இப்பகுதியில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தப் பகுதியே பாலைவனமாகிவிடும். ஏற்கெனவே, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டில் 606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் மிகவும் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
    இந்நிலையில், "ஹைட்ரோ கார்பன்' உற்பத்தி நடைமுறையானது பசுமை இல்ல வாயுக்களான கார்பன் மோனாக்ûஸடு, கார்பன்டைஆக்ûஸடு, சல்பர் ஆக்ûஸடு, நைட்ரஜன் ஆக்ûஸடு ஆகியவை உருவாகக் காரணமாக அமையும். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் உருவாகும் எண்ணெய் கசிவும் விவசாய நிலங்களுக்கு மிகவும் தீங்கிழைக்கும். ஏற்கெனவே தண்ணீர்ப் பற்றாக்குறையால் தமிழகம் தவித்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கு அதிக அளவு நீர் பயன்படுத்தப்படும் என்பதால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகும். இதனால், கடந்த 22 நாள்களாக பொதுமக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    விவசாயத்திற்கு சாத்தியமான பொருளாதார ரீதியிலான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். மாறாக, வேளாண் நிலங்களைப் பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. "ஹைட்ரோ கார்பன்' திட்டம் செயல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயரும் நிலை உருவாகும். இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு, இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அத்துடன், திட்டத்துக்காக ஆராய்ச்சிப் பணிள் ஏதும் நடத்தப்படாது என்ற உறுதியையும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றார் திருச்சி சிவா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai