சுடச்சுட

  

  ஹோலிப் பண்டிகை மற்றும் வார இறுதி நாள்களையொட்டி மாநிலங்களவைக்கு
  4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  இதையடுத்து அடுத்த வாரம் புதன்கிழமை (மார்ச் 15) மீண்டும் அவை கூடும் என்று மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்துள்ளார்.
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெற்ற அலுவல்களில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக அதிகரிப்பதற்கான மசோதா, எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
  இந்நிலையில், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  அதன்படி வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மாநிலங்களவைக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மக்களவையைப் பொருத்தவரை வார விடுமுறை தவிர, ஹோலிப் பண்டிகைக்காக திங்கள்கிழமை (மார்ச் 13) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும் என்று அவையின் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai