சுடச்சுட

  

  115 ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வை-ஃபை சேவையால் 50 லட்சம் பேர் பயன்: சுரேஷ் பிரபு

  By DIN  |   Published on : 11th March 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  suresh prabhu

  நாட்டிலுள்ள 115 ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வை-ஃபை சேவையால் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டிலுள்ள 400 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
  இந்தத் திட்டம், தற்போது 115 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை ரயில் பயணிகள் மட்டுமல்லாது, ரயில் நிலையங்களுக்கு வரும் பார்வையாளர்களும், மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
  ரயில் நிலையங்களில் மட்டுமல்லாது ஓடும் ரயிலிலும் இலவச வை-ஃபை சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக, சில ரயில்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
  என்றார் சுரேஷ் பிரபு.
  ரயில் உணவு திருப்திகரமாக இல்லை: ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவின் தரம் தொடர்பாக மாநிலங்களவையில் சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு, சுரேஷ் பிரபு பதிலளித்துப் பேசியதாவது:
  ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதுதொடர்பாக, பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடாக, புதிய உணவுக் கொள்கை உருவாக்கப்படும்.
  இதன்படி, ரயில்களில் உணவு சமைக்கப்படும் அறைகள் நவீனப்படுத்தப்படும். மேலும், அனுபவமும், திறமையும் வாய்ந்தவர்கள் மட்டுமே சமைக்க அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக, ஒப்பந்தப் புள்ளிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  ரயில்களில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயணித்துவரும் நிலையில், அவர்களுக்கு பாரம்பரிய உணவு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்றார் சுரேஷ் பிரபு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai