சுடச்சுட

  

  5 மாநிலத் தேர்தல்: முக்கியத் தலைவர்களின் வெற்றி - தோல்வி நிலவரம்

  By DIN  |   Published on : 11th March 2017 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_happy


  புது தில்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

  இதுவரை வெளியான தகவலின்படி, உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகாண்ட் மாநிலத்திலும் மத்தியில் ஆளும் பாஜக வெற்றியை உறுதி செய்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. கோவா மற்றும் மணிப்பூரில் இழுபறி நிலை நீடிக்கிறது.

  இந்த நிலையில், 5 மாநிலங்களிலும் போட்டியிட்ட முக்கியத் தலைவர்களின் வெற்றி தோல்வி குறித்து ஒரு அலசல்.

  பஞ்சாப்பில் அமரிந்தர் சிங்
  பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மீண்டும் ஆட்சி அமைத்து, காங்கிரஸ் தொண்டர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் அமரிந்தர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

  அமரிந்தர் சிங்கின் 75வது பிறந்த நாள் இன்று. அவரது பிறந்தநாள் பரிசாக, வெற்றிக் கனியை பஞ்சாப் மாநில மக்கள் அளித்துள்ளனர். ஒருவேளை அவர் தோல்வி அடைந்திருந்தால், இது அவர் சந்தித்த கடைசித் தேர்தலாக இருக்கும் என்ற கணிப்புகளை அவர் பொய்யாக்கிவிட்டார்.

  மணிப்பூர் மாநில முதல்வர் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். தவ்பால் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.

  மண்ட்ரம் தொகுதியில் போட்டியிட்ட கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர்  தோல்வி அடைந்தார்.

  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ தொகுதியில் போட்டியிடட் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

  உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஹரித்வார் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். மற்றொரு தொகுதியான கிச்சாவிலும், பின்னடைவை சந்தித்து வருகிறார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai