சுடச்சுட

    

    5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்: 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை

    By DIN  |   Published on : 11th March 2017 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vote

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருப்பதால் சனிக்கிழமை பிற்பகலுக்குள் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சிகள் எவை என்பது தெரிந்துவிடும்.

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள 403 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் கடந்த 8-ஆம் தேதி வரையிலும் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. உத்தரகண்டில் (70 தொகுதிகள்) கடந்த மாதம் 15-ஆம் தேதியும், பஞ்சாப் (117) மற்றும் கோவா (40) ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் 4-ஆம் தேதியும், மணிப்பூரில் (60) கடந்த 4 மற்றும் 8-ஆம் தேதியன்றும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில் 78 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டில் 15 மையங்களிலும், பஞ்சாபில் 54 மையங்களிலும், கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 12 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 5 மாநிலங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

    முன்னிலை வாகிக்கும் கட்சிகளின் நிலவரம்:
    உத்தரபிரதேசம் (403)
    எஸ்பி+  - 72
    பாஜக   - 304
    பிஎஸ்பி - 19
    மற்றவை - 7

    பஞ்சாப் (117)
    பாஜக கூட்டணி - 28
    காங்கிரஸ் - 71
    ஆம் ஆத்மி - 24
    மற்றவை - 1

    உத்தராகண்ட் (70)
    காங்கிரஸ் - 11
    பாஜக - 54
    மற்றவை - 5

    மணிப்பூர் (60)
    காங்கிரஸ் - 21
    பாஜக - 15
    இடதுசாரிகள் - 1
    மற்றவை - 5

    கோவா (40)
    காங்கிரஸ் - 11
    பாஜக - 8
    மற்றவை - 4

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai