சுடச்சுட

  

  அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அசீமானந்த் விடுதலை: இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

  By DIN  |   Published on : 12th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அசீமானந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு, இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கவலை தெரிவித்தது.
  அஜ்மீர் தர்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்; 17 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதில் 3 பேரை குற்றவாளிகளாக என்று ஜெய்ப்பூர் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆசீமானந்த் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இந்நிலையில், இஸ்லாமாபாதில் இருக்கும் இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பி அவரை நேரில் வரவழைத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள தெற்காசிய மற்றும் சார்க் விவகாரத்துக்கான டைரக்டர் ஜெனரல், இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்கை நேரில் அழைத்துப் பேசினார்.
  அப்போது, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு கவலைத் தெரிவித்தார்.
  சம்ஜௌதா விரைவு ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரையுமó நீதியின் முன்நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்று அந்த அறிக்கையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைக்கம் தெரிவித்துள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai