சுடச்சுட

  
  modi

  பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதையடுத்து, அக்கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அமரீந்தர் சிங்கை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  அமரீந்தர் சிங்குடன் பேசினேன்; அப்போது பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
  அமரீந்தர் சிங்கின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்தையும், அவர் நீண்டகாலம், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தேன் என்று அந்த சுட்டுரைப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai