அமிருதசரஸில் சித்து வெற்றி
By DIN | Published on : 12th March 2017 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய காங்கிரஸ் வேட்பாளர் நவஜோத் சிங் சித்து. உடன் அவரது மனைவி நவஜோத் கௌர்.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் (கிழக்கு) சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவஜோத் சிங் சித்து வெற்றி பெற்றுள்ளார். அவர் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேஷ்குமார் ஹனியை 42,809 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து பாஜகவில் இருந்து விலகி இந்த ஆண்டில் காங்கிரஸில் இணைந்தார். நடந்து முடிந்துள்ள பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் அமிருதசரஸ் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட்ட அவர் 60,477 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேஷ்குமார் ஹனிக்கு 17,668 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் சரப்ஜோத் சிங் 14,715 வாக்குகளும் பெற்றனர்.
முன்னதாக, இத்தொகுதியில் கடந்த 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் சித்துவின் மனைவி நவஜோத் கௌர் சித்து, பாஜக வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.