சுடச்சுட

    
    Pchidambaram

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் பேரவைத் தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, நாட்டின் ஆளுமைத்திறன் மிகுந்த அரசியல் தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்திருப்பது தெரிகிறது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வர்த்தக சபைக் கூட்டத்தில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
    பேரவைத் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றி மூலம் மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் அதிகரிக்கும். மக்களவையைப் போன்றே மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் எந்த மசோதாவை வேண்டுமானாலும் மத்திய அரசு நிறைவேற்றக்கூடும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்போது மதிப்பு இருக்காது.
    எனினும், தற்போது உள்ள அரசியல் சூழலில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) 8 சதவீதமாக அதிகரிக்க முடியும். ஆனால், அதனை மத்திய அரசு சாத்தியமாக்குமா? என்பது தெரியவில்லை.
    தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது நாட்டின் ஆளுமைமிக்க அரசியல் சக்தியாக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார் என்பது தெரிகிறது. தேசம் முழுவதும் செல்வாக்கு பெற்றவராக அவர் உள்ளார்.
    உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று காரணம் கற்பிக்க இயலாது.
    இந்த வெற்றியின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் மீதான பொது வாக்கெடுப்பாக இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்கக் கூடாது என்றார் ப.சிதம்பரம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai