சுடச்சுட

    
    ak-mu

    உத்தரப் பிரதேச மக்களைச் சந்தித்து, சமாஜவாதி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு சமாஜவாதி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவும், நிறுவனர் முலாயம் சிங் யாதவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் 325 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. குறிப்பாக, பாஜக மட்டும் 312 இடங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த சமாஜவாதியும் (47), அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸýம் (7) 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தன.
    இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் சமாஜவாதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அகிலேஷ் யாதவும், முலாயம் சிங் யாதவும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
    சமாஜவாதி என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல. இது ஒரு சித்தாந்தம் ஆகும். நமது கட்சியின் போராட்டம் தொடரும்.
    உத்தரப் பிரதேச மக்களை நேரில் சந்தித்து, கட்சியை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். தேர்தலில் கட்சியின் செயல்பாட்டையும், தேர்தல் முடிவுகளையும் நான் ஆய்வு செய்வேன். தேர்தலில் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர்கள், புதிய சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அடுத்த வாரத்தில் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் புதிய யுக்தி வகுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
    கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில், சமாஜவாதி கட்சி 224 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் செய்தபோதிலும் 47 இடங்களில் மட்டுமே சமாஜவாதி கட்சியால் வெற்றி பெற முடிந்தது.
    உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக வீசிய அலையால், அந்த மாநில தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், தேர்தலில் முழுவதும் தோற்கடிக்கப்பட்டு விட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai