Enable Javscript for better performance
சசிகலா தலைமையில் கட்சியை காக்க கர்நாடக மாநில அதிமுக தீர்மானம்!- Dinamani

சுடச்சுட

    

    சசிகலா தலைமையில் கட்சியை காக்க கர்நாடக மாநில அதிமுக தீர்மானம்!

    By DIN  |   Published on : 12th March 2017 06:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் ஒன்றுபட்டு கட்சியை காக்க கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பெங்களுர், சிவாஜி நகரில் உள்ள நியூ கிராண்ட் தாஜ் ஓட்டல் அரங்க வளாகத்தில் கர்நாடக மாநில அதிமுக மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் கட்சி கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் தொடர்ந்திட கட்சியினர் அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட்டு வருவதோடு, எதிரிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளனர். மேலும் அதிமுக அணி வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai