Enable Javscript for better performance
சுக்மா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி- Dinamani

சுடச்சுட

    

    சுக்மா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

    By DIN  |   Published on : 12th March 2017 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    devendrafadanvis

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த மகாராஷ்டிரத்தை சேர்ந்த 3 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார்.
    சமூக வலைதளமான சுட்டுரையில் மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முதல்வர் ஃபட்னவீஸ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "சுக்மா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 12 சிஆர்பிஎஃப் வீரர்களின் துணிச்சலுக்கு மகாராஷ்டிரம் தலை வணங்குகிறது. அவர்களில் 3 வீரர்கள் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு துணை நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai