சுடச்சுட

    

    சுக்மா தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று: சத்தீஸ்கர் காவல்துறை

    By DIN  |   Published on : 12th March 2017 11:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுக்மா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று என சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.
    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து நக்ஸலைட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து சத்தீஸ்கர் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசாரணையில், இந்த தாக்குதல் திடீரென நிகழ்த்தப்பட்டது அல்ல என்பது தெரியவந்துள்ளது.
    இதுகுறித்து சத்தீஸ்கர் காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
    இஞ்ச்ராம் - பேஜ்ஜி பகுதியில் நடைபெற்று வரும் சாலைக் கட்டுமானப் பகுதிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிஆர்பிஎஃபி-இன் 219-ஆவது படைப்பிரிவினர் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு அருகே நடைபெறும் வாரச் சந்தையிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஊர்வலம் நடத்தினர். இந்தப் பேரணியானது வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் வாரச்சந்தையில் நடத்தப்படுவது வழக்கம்.
    இந்த வாரச் சந்தையிலிருந்து சிறிது தொலைவில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக திட்டமிட்டு இந்த தாக்குதலை நக்ஸல்கள் அரங்கேற்றியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் துப்பாக்கிகள் மட்டுமன்றி நவீன கையெறி குண்டுகளும், சிறிய ரக ராக்கெட் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என அந்த அதிகாரி தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai