சுடச்சுட

    

    சுக்மா தாக்குதல்: ஹோலி கொண்டாட்டத்தை தவிர்க்க ராஜ்நாத் சிங் முடிவு

    By DIN  |   Published on : 13th March 2017 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RAJNATH2

    சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேர் பலியான சம்பவத்தையடுத்து, ஹோலி பண்டிகையை திங்கள்கிழமை (மார்ச் 13) கொண்டாடுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.
    இதுகுறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சத்தீஸ்கரில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேர் பலியான சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலையடைந்துள்ளார். இதனால், ஹோலி பண்டிகையை திங்கள்கிழமை கொண்டாடுவதில்லை என்று
    ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்றார் அவர்.
    முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் வனப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து நக்ஸலைட் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேர் பலியாகினர்.
    இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை சென்றார். அப்போது அவர், நக்ஸலைட்டுகள் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியபோது, சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலை கோழைத்தனமான செயல் என்றும், சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது என்றும் குறிப்பிட்டார்.
    உயிரிழந்த வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai