சுடச்சுட

  

  நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்: தமிழக அரசு அறிவிப்பு

  By DIN  |   Published on : 12th March 2017 06:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  palanisamy

  சென்னை: நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் சங்கர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட் தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர், விழுப்புரம் மாவட்டம் கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் மு.சங்கர் கடந்த 11-ஆம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

  இந்த துயரச் சம்பவத்தில் அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai