சுடச்சுட

    

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராக மாட்டேன்

    By DIN  |   Published on : 12th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karnanJudge

    ’உச்ச நீதிமன்றத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள எனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராக மாட்டேன்' என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் தெரிவித்துள்ளார்.
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடி ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில், அவர் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ’எனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, என்னைத் துன்புறுத்தவே நடைபெறுகிறது. எனக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசியல்சாசனத்துக்கு விரோதமானது. நான் தலித் என்பதாலேயே இவ்
    வாறு என்னைக் குறிவைக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
    அதைத் தொடர்ந்து, ’உச்ச நீதிமன்றத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராவீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ’நான் ஏன் ஆஜராக வேண்டும்?' என்று கர்ணன் எதிர்கேள்வி எழுப்பினார். இதன் மூலம் அந்த விசாரணையில் தாம் ஆஜராகப் போவதில்லை என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai