Enable Javscript for better performance
’நோட்டா' வாக்கு: கோவாவில் அதிகம்- Dinamani

சுடச்சுட

    

    ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், கோவாவில்தான் அதிகம் பேர் ’நோட்டாவை' (எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) தேர்வு செய்துள்ளனர்.
    இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கோவாவில் 1.2 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அடுத்த இடத்தில் உத்தரகண்ட் (1 சதவீதம்) இருக்கிறது.
    உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் நோட்டாவுக்கு 0.9 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. பஞ்சாபில் 0.7 சதவீத வாக்காளர்களும், மணிப்பூரில் 0.5 சதவீத வாக்காளர்களும் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.
    403 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப் பிரதேசத்தில் 4,800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதேபோல, 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 1,100 பேர், 70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்டில் 600 பேர், 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் 100 பேர், 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 250 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai