Enable Javscript for better performance
பாஜகவினருக்கு பொது அறிவு குறைந்துவிட்டதா? முதல்வர் சித்தராமையா கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவினருக்கு பொது அறிவு குறைந்துவிட்டதா? முதல்வர் சித்தராமையா கேள்வி

    By DIN  |   Published on : 12th March 2017 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sidharamaya

    மைசூரு: 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றால், கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும்போது மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு பாஜக ஆட்சேபம் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது. பாஜகவினருக்கு பொது அறிவு குறைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இது குறித்து மைசூருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
    5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதத்தை அடிப்படையாக வைத்தே பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டியிருப்பதாக பாஜக மாநிலத்தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். இப்படி சொல்லும் எடியூரப்பா என்ன மதத்தலைவரா? எடியூரப்பா போன்ற ஊழல்வாதியை உலகில்வேறு எங்கும் காணமுடியாது. முன்பு பாஜக ஆட்சியில் இருந்தபோது எடியூரப்பா செய்த பாவங்களை போக்குவதற்கு இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் போதாது.

    5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றால், கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும்போது மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாதா? மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு பாஜக ஆட்சேபம் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது. பாஜகவினருக்கு பொது அறிவு குறைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

    வறட்சி நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கியுள்ளோம். வறட்சி நிவாரணப்பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. எனவே, பாஜகவினரிடம் இருந்து நாங்கள் பாடம் கற்கவேண்டியதில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai