சுடச்சுட

    

    புதிய இந்தியா பிறக்கிறது; வளர்ச்சியே அதன் நிலைப்பாடு: நரேந்திர மோடி பெருமிதம்!

    By DIN  |   Published on : 12th March 2017 08:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    புது தில்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் பெற்ற வெற்றியும் பிற மாநிலங்களில் பெற்ற வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில், புதிய இந்தியா உருவாகி வருகிறது என்றும் அது வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    அதேநேரத்தில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியமைப்பது தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பது குறித்து பிற கட்சிகளுடன் பாஜகவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் சக்தியாலும், வலிமையாலும் புதிய இந்தியா பிறக்க உள்ளது. அது வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளில், அதாவது 2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாட உள்ளோம். அப்போது, காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களுக்கு பெருமைப்படுத்தும் விதத்தில் நாடு கட்டமைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    புதிய இந்தியாவை கட்டமைப்பது தொடர்பான யோசனைகளை பொதுமக்கள் எனது பெயரில் (நரேந்திர மோடி ஆப் மூலம்) தெரிவிக்கலாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai