சுடச்சுட

  

  மகாராஷ்டிரத்தில் பேருந்துடன் லாரி மோதி விபத்து: 11 பேர் பலி

  By DIN  |   Published on : 12th March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  axident

  மகாராஷ்டிர மாநிலம், புனே அருகில் சனிக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் உருக்குலைந்துபோன பேருந்து மற்றும் சரக்கு வாகனம்.

  மகாராஷ்டிர மாநிலம், புனே அருகில் பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
  இதுதொடர்பாக, போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: மும்பையின் புறநகர் பகுதியான முலுந்த் நகரைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், சோலாப்பூர் நகரிலுள்ள கோயிலுக்குச் செல்வதற்காக பேருந்து ஒன்றில் சனிக்கிழமை புறப்பட்டனர். அந்தப் பேருந்து, புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில் கோரேகான் கிராமம் அருகே வந்தபோது பன்றி ஒன்று குறுக்கிட்டதாகத் தெரிகிறது. அதன் மீது மோதுவதைத் தவிர்க்கும்பொருட்டு, பேருந்து ஓட்டுநர் வண்டியை பக்கவாட்டில் திருப்பியுள்ளார். அப்போது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் பேருந்து ஓட்டுநரும், பேருந்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai