சுடச்சுட

    

    மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை: மனோகர் பாரிக்கர்

    By DIN  |   Published on : 12th March 2017 08:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manohar parikkar

    பானாஜி: கோவாவில் ஆட்சி அமைக்க பாஜகட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பிற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது.

    இந்நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் பாஜக ஆட்சி அமைக்க, 3 இடங்களில் வெற்றிபெற்ற எம்.ஜி.பி.கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    எம்.ஜி.பி.கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் மனோகர் பாரிக்கரை முதல்வராக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மேலும், கோவா பாஜக எம்.எல்.ஏ.க்களின் முடிவு பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சிறிய காட்சிகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தகவல்கள் வெளியானதுடன் தான் வகித்து வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்று சற்று நேரத்தில் 22 ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவுடன் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மனோகர் பாரிக்கர் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai