சுடச்சுட

  

  மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: உ.பி. தேர்தல் முடிவுகள் குறித்து அமித் ஷா

  By DIN  |   Published on : 12th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha

  உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தில்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த கட்சித் தலைவர் அமித் ஷாவை ஆரவாரத்துடன் வரவேற்ற தொண்டர்கள்.

  பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால்தான் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  மேலும், சுதந்திரத்துக்குப் பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தேசத் தலைவராக மோடி திகழ்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். இதுகுறித்து அமித் ஷா சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:
  உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பாஜவுக்குக் கிடைத்துள்ள வெற்றி, மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் ஊழலற்ற, ஏழைகளின் நலன்களைப் பேணும் ஆட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியாகும்.
  பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
  இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி, இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றப் போகிறது.
  நாட்டில் சாதி அரசியல், குடும்ப அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகியவை முடிவுக்கு வரப்போவதையே பாஜகவின் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.
  எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத கோவாவிலும், மணிப்பூரிலும் ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
  இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு தேசிய அளவில் மிகப் பெரிய சக்தி வாய்ந்த தலைவராக மோடி உருவெடுத்துள்ளதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள்.
  பஞ்சாபில் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், பாஜகவுக்கு 30 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றதாக பகுஜன் சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருப்பது, அவர் விரக்தியில் இருப்பதைக் காட்டுகிறது என்றார் அமித் ஷா.


   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai