Enable Javscript for better performance
மோடியை எதிர்கொள்ள எந்தத் தலைவருமில்லை- Dinamani

சுடச்சுட

    
    omarabdullah

    பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்வதற்கு இந்தியா முழுவதும் எந்த அரசியல் தலைவருமில்லை என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறினார்.
    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகத் தொடங்கிய பிறகு, அது தொடர்பாக, ஒமர் அப்துல்லா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
    உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் சுனாமி புரட்டியெடுத்துவிட்டது. இந்த நிலையில், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்வதற்கு எந்தத் தலைவரும் இல்லை. அதேபோல், பாஜகவை எதிர்கொள்வதற்கு எந்தக் கட்சியுமில்லை.
    எனவே, 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் மறந்துவிட்டு, 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குத் திட்டமிடலாம்.
    எதிர்க்கட்சிகள் வெற்று விமர்சனங்களை கைவிட்டு ஆக்கப்பூர்வமான மாற்றுத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார் ஒமர் அப்துல்லா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai