சுடச்சுட

    

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி; மறு தேர்தல் நடத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 12th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mayavathi

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் விழும் வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளது; ஆதலால், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்'' என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது.
    இந்நிலையில், லக்னௌவில் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
    வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை வாக்காளர்கள் அழுத்தினாலும், அது பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகும் வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஆதலால், வாக்குகள் எண்ணும் பணியையும், தேர்தல் முடிவுகள் வெளியிடுவதையும் தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு வாக்குச்சீட்டுகள் மூலம் மீண்டும் புதிதாக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் நான் சவால் விடுக்கிறேன். அவர்களிடம் சிறிதளவுக்கும் நீதி, நேர்மையிருந்தால், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு மீண்டும் தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த
    வேண்டும் என்றார் மாயாவதி.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai