சுடச்சுட

  
  mamtha

  ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
  தேர்தலில் தோல்வியுற்றவர்கள், மனதைத் தளரவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  எனினும், அவர் தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சியின் பெயரையும், எந்தக் கட்சியின் வேட்பாளரையும் குறிப்பிடவில்லை.
  இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
  பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். தேர்தலில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  இருப்பினும், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மனதைத் தளரவிட்டுவிட வேண்டாம் என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai