சுடச்சுட

  
  ArunJetl

  உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது கால்தவறி கீழே விழுந்தார்.
  யோகா குரு ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி மூலிகை உணவுப் பண்ணை உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பதார்த்தா பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவைப் பார்வையிட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றார்.
  ராம்தேவுடன் இணைந்து பூங்காவைப் பார்வையிட்ட அவர், பின்னர் அங்கிருந்து புறப்படுவதற்காக ஹெலிகாப்டரில் ஏற முயன்றார். அப்போது ஜேட்லி கால்தவறி கீழே விழுந்தார். எனினும், இந்தச் சம்பவத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
  சிறிது நேரம் அப்பகுதியில் இளைப்பாறிய ஜேட்லி, அதன் பின் அங்கிருந்து அதே ஹெலிகாப்டரில் தில்லி புறப்பட்டுச் சென்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai