சுடச்சுட

    

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 85 இந்திய மீனவர்களில் 77 பேரை அந்நாட்டு அரசு சனிக்கிழமை விடுதலை செய்தது.
    எனினும், அவர்கள் அனைவரும் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணம் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் தாய் நாடு அழைத்து வரப்படவில்லை.
    இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் கோபால் பாக்லே கூறியதாவது:
    இலங்கை சிறைகளில் மொத்தம் 85 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 77 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார்கள். எஞ்சியுள்ள இந்திய மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் கோபால் பாக்லே.
    அண்மையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 வயது இளைஞரை இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்து வருகிறது.
    இந்தச் சூழலில் இலங்கை அரசு 77 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய அனைவரும் தமிழக மீனவர்கள். இந்தியச் சிறைகளிலும் 19 இலங்கை மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai