Enable Javscript for better performance
அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்

    By DIN  |   Published on : 13th March 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே, அந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் எம்.ஜி. வைத்யா தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டடத்தை கட்டுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதில் இருந்து, ராமர் கோயில் கட்டுவதற்கு மக்கள் ஒப்புதல் அளித்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது.
    சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததை அலாகாபாத் உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
    அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது, ராமர் கோயில் கட்டடத்தின் இடிக்கப்பட்ட பாகங்கள் கிடைத்துள்ளன.
    அயோத்தி ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் உச்ச நீதிமன்றம் தோல்வியடையும் பட்சத்தில், அந்த கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார் எம்.ஜி. வைத்யா.
    முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு வைத்யா சனிக்கிழமை அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர்; தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பது இதையே பிரதிபலிக்கிறது' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai