சுடச்சுட

  

  ஆந்திர மாநில சட்டப் பேரவை உறுப்பினர் பூமா நாகி ரெட்டி (53) மாரடைப்பால் காலமானார்.
  கர்னூல் மாவட்டம், அல்லகட்டா நகரிலுள்ள தனது இல்லத்தில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், முதலுதவி சிகிச்சைக்குப் பின் நந்தியால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் அவரது உறவினரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.வி. மோகன் ரெட்டி தெரிவித்தார்.
  பூமா நாகி ரெட்டிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் அகிலா பிரியா உள்பட இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
  கர்னூல் மாவட்டத்தின் சக்தி வாய்ந்த தலைவராகத் திகழ்ந்த பூமா நாகி ரெட்டி, 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் முதல்முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேரவைக்கு 1994-ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.
  2014-ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பூமா நாகி ரெட்டி, 2016-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
  நந்தியால் மக்களவைத் தொகுதியில் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து 1998 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் போட்டியிட்டு பூமா நாகி ரெட்டி வெற்றி பெற்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai