சுடச்சுட

  

  உத்தரகண்ட் மாநிலம் லோஹாகாட் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  அந்த சாவடியில் பதிவான வாக்குகளை எண்ணியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. இதன் காரணமாக அதில் எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாயின என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
  இதனால், அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கையும் நடுவிலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து பிரச்னைக்குள்ளான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
  இதன்படி, அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் புதன்கிழமை (மார்ச் 15) மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மறுவாக்குப் பதிவின்போது அங்கு பதிவாகும் வாக்குகள் அன்று மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
  முன்னதாக, அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டபோது பாஜக வேட்பாளர் பூரண் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குஷால் சிங்கைவிட 450 வாக்குகள் அதிம் பெற்றிருந்தார்.
  மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் 56 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுவிட்டது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸýக்கு 11 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai