சுடச்சுட

  

  உத்தரகண்ட் முதல்வர் ஓரிரு நாளில் தேர்வு: பாஜக அறிவிப்பு

  By DIN  |   Published on : 13th March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரகண்ட் மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஓரிரு நாளில் நடைபெறும்; இதில் பாஜக ஆட்சி மன்றக் குழுவின் ஒப்புதலுடன் முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்னாள் முதல்வர்களான பி.சி.கந்தூரி, பி.எஸ்.கோஷியாரி, ரமேஷ் போக்ரியால், விஜய் பகுகுணா ஆகிய நால்வருக்கு இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் முடிவே இறுதியாக இருக்கும் என்று தெரிகிறது.
  தலைநகர் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அஜய் பட் கூறியதாவது: கட்சியின் ஆட்சி மன்றக் குழுவின் ஒப்புதலுடன் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஓரிரு நாளில் நடைபெறும். அதில், உத்தரகண்ட் மாநில புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார். முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. கட்சித் தலைமை எந்தப் பொறுப்பை எனக்கு அளித்தாலும் அதில் திறமையாக செயல்படுவேன். பாஜக மிகவும் கட்டுக்கோப்பான கட்சி. ஆட்சி மன்றக் குழு, எவரது பெயரை பரிந்துரைக்கிறதோ, அவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார்.
  பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தந்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை முழுமையாக நிராகரித்துவிட்டனர். முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தது, இதனை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai