சுடச்சுட

    

    உ.பி.: அதிக, குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள்

    By DIN  |   Published on : 13th March 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், குறைந்தபட்சமாக 171 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 5 வேட்பாளர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியா
    சத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
    ஷாகிபாபாத் பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுனில் குமார் சர்மா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அமர்பாலை 1,50,685 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    இதேபோல், ராத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிஷா அனுராகி, 1,04,643 வாக்குகள் வித்தியாசத்திலும், நொய்டா தொகுதி பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் (ராஜ்நாத் சிங் மகன்) 1,04,016 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
    குண்டா தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜா பையா, 1,03,647 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தார்.
    பாஜக தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, 1,01,161 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் மாத்தூரை தோற்கடித்தார்.
    குறைந்த வாக்கு வித்தியாசம்..: இதேபோல், குறைந்தபட்சமாக, தோமரியாகஞ்ச் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திர பிரதாப் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை 171 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    இதேபோல், பாஜக வேட்பாளர் அவதார் சிங் (மீராபூர்), பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஷியாம் சுந்தர் சர்மா (மான்ட்), பாஜக வேட்பாளர் ராம் ஃபெரான் (சரஸ்வதி), சமாஜவாதி வேட்பாளர் அம்ப்ரீஷ் சிங் (மோகன்லால்கஞ்ச்), பாஜக வேட்பாளர்கள் ஸ்ரீராம் சோன்கர் (முகமதாபாத்), தேவேந்திர குமார் நீம் (ராம்பூர் மணிஹரன்), தேவேந்திர குமார் நீம் (முபாரக்பூர்) ஆகியோர் முறையே 193, 432, 445, 530, 538, 595, 688 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
    பெற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai