சுடச்சுட

  

  மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரப் பிரதேச பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங் மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை ரத்து செய்துள்ளது.
  உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தயாசங்கரின் மனைவி ஸ்வாதி சிங், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜக மகளிரணித் தலைவியாகவும் உள்ளார்.
  முன்னதாக, கடந்த ஜூலை மாதம் மாயாவதி குறித்து தரக்குறைவாக விமர்சித்த தயாசங்கர், "காலையில் ஒருவர் ரூ.1 கோடி கொடுத்து தேர்தலில் டிக்கெட் கேட்டால் பகுஜன் சமாஜ் சார்பில் மாயாவதி இடம் ஒதுக்குகிறார். மதியம் வேறு ஒருவர் ரூ.2 கோடி கொடுத்து அதே தொகுதியைக் கேட்டால், அவருக்கு அந்த இடத்தைத் தருகிறார். மாலையில் மற்றொருவர் ரூ.3 கோடி கொடுத்தால், அவருக்கு தொகுதியைத் தந்துவிடுகிறார். இது தரம்தாழ்ந்த தொழில் செய்யும் பெண்களுக்கு ஒப்பானது' என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தயாசங்கரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய பாஜக தலைமை, தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றியது.
  இதையடுத்து, அவர் மீது எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதான அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிகாரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். இதனிடையே, மாயாவதி கட்சியினர் தயாசங்கரின் மனைவி உள்ளிட்ட அவரது குடும்பப் பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai