சுடச்சுட

  

  ஒடிஸா மாநிலம், சம்பல்பூர் மாவட்ட ஊராட்சித் தேர்தலின்போது மாநில பாஜக துணைத் தலைவர் சமீர் மொஹந்தியை தாக்கியதாக அக்கட்சியைச் சேர்ந்த 11 பேர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
  இதுகுறித்து ஒடிஸா மாநில பாஜக தலைவர் வசந்த் பாண்டா கூறியதாவது:
  சம்பல்பூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு சமீர் மொஹந்தி கண்காணிப்பாளராக இருந்தார். அப்போது, மாவட்ட ஊராட்சித் தலைவரை கட்சியினர் ஒரு மனதாக தேர்வு செய்வதாக இருந்தது. ஆனால், சிலர் வேறொருவரை கட்சித் தலைவராக தேர்வு செய்யலாம் என்று குரலெழுப்பினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சமீர் மொஹந்தியை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் காயமடைந்தார். இதையடுத்து, தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயநாராயண் மிஸ்ரா, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நௌரி நாயக் உள்பட 11 பேர் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றார் வசந்த் பாண்டா.
  இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயநாராயண் மிஸ்ரா தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai