சுடச்சுட

  

  கோவாவில் பாஜக குதிரை பேரம்: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 13th March 2017 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  digvijaya-singh

  கோவாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
  மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 17 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவாகியுள்ளது. பாஜகவுக்கு 13 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. எம்ஜிபி, கோவா முன்னேற்றக் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 3 இடங்களில் வென்றுள்ளனர். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஓரிடத்தைக் கைப்பற்றியுள்ளது.
  இந்நிலையில், பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் கூறியதாவது:
  பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று கோவாவில் எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டுமென்று பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக அமைச்சர் பதவி, கோடிக்கணக்கில் பணம், கார் உள்ளிட்டவற்றைத் தருவதாக எம்எல்ஏ-க்களிடம் அவர்கள் பேரம் பேசி வருகின்றனர்.
  பாஜக சார்பில் முதல்வராக இருந்தவர் தோல்வியடைந்துவிட்டார். 6 அமைச்சர்களும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், பாஜகவுக்கு ஆட்சி அமைக்க என்ன உரிமை இருக்கிறது? கோவாவில் தோல்வியை பாஜக ஓப்புக் கொள்ள வேண்டும். பிற கட்சி எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்து ஆட்சி அமைத்துவிடலாம் என்று முயற்சிக்கக் கூடாது என்றார் அவர்.
  முன்னதாக கோவா தேர்தலில் தெளிவான முடிவு கிடைக்காதது குறித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர், "கோவாவில் இப்போதுள்ள சூழ்நிலையில் பாஜகவும் ஆட்சி அமைப்பதற்கான போட்டியில் உள்ளது. சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும்' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai