Enable Javscript for better performance
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

    By DIN  |   Published on : 13th March 2017 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ் மாவட்டத்தில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இது கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் நடத்திய 3வது தாக்குதல் சம்பவமாகும்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சக்கந்த பாக் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மையத்தின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர். சிறிய ரக துப்பாகியால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலை மீண்டும் அதே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களை பாகிஸ்தான் படையினர் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை நடந்த துப்பாக்கி சண்டையில் உயிர்ச் சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  

    பாகிஸ்தான் படையினரால் 10 வருடங்களுக்கு முன்னால் இந்திய பாகிஸ்தான் உறவு மேம்படுவதற்கான ஒரு அடையாளமாக துவங்கப்பட்ட வர்த்தக மையம் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த வர்த்தக மையத்தில் வாரத்தில் நான்கு நாள் மட்டும் பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai