சுடச்சுட

    
    tirupathi

    திருமலையில் மார்ச் 28-ஆம் தேதி 6 மணி நேரத்துக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருமலையில் வரும் மார்ச் 29-ஆம் தேதி யுகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    அன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நடக்க உள்ளது. அதனால் அதற்கு முந்தைய நாளான மார்ச் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கோயில் முழுவதையும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளது.
    இதையொட்டி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
    அன்றைய தினம் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனிமையில் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai