Enable Javscript for better performance
தெலுங்கு தேச எம்.எல்.ஏ. திடீர் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    விஜயவாடா: ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. புமா நாகி ரெட்டிக்கு(53) திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

    கர்னூல் மாவட்டம் நந்தியால் தொகுதியில் இருந்து எம்.எம்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். வீட்டில் இருந்த புமா நாகி ரெட்டிக்கு நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் குடும்பத்தினர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புமா நாகி ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புமா நாகி ரெட்டியின் மறைவுக்கு முதல்வர்சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai