சுடச்சுட

  

  தோல்விக்கு ஒருவர் மட்டும் காரணம் அல்ல: முலாயம் சிங் யாதவ்

  By DIN  |   Published on : 13th March 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mulayalam_singh

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் காரணம் அல்ல என்று சமாஜவாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேச மாநிலம், எடாவா நகரில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி தோல்வி அடைந்ததற்கு குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் காரணமல்ல. வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்க நாம் தவறிவிட்டோம்.
  பாஜக அளித்த வாக்குறுதிகளை நம்பி அக்கட்சியை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்து விட்டனர். அக்கட்சி தலைமையிலான அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என்று பார்க்கலாம் என்றார் முலாயம் சிங்.
  முன்னதாக, தேர்தலில் தோல்வி அடைந்ததற்குரிய காரணத்தை ஆய்வு செய்வோம் என்று முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் சிங் யாதவ் தெரிவித்தார்.
  மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரேதசத்தில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றது. 325 இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai