சுடச்சுட

  
  sidhu

  பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் ஹாக்கி அணியின் கேட்பன் பர்கத் சிங், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உறவினர் மன்பிரீத் சிங் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  எனினும், இதுதொடர்பான விவரங்களை அமரீந்தர் சிங் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
  117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றிபெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாநில முதல்வராக அமரீந்தர் சிங், வரும் 16-ஆம் தேதி பதவியேற்கிறார்.
  அவரது அமைச்சரவையில் வெவ்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அனுபவமிக்க முதியவர்களுக்கும், ஆற்றல்மிக்க இளைஞர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  குறிப்பாக, நவ்ஜோத் சிங் சித்து, பர்கத் சிங், மன்பிரீத் சிங் பாதல் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இவர்களைத் தவிர, பெண் உறுப்பினர்களான ரஸியா சுல்தானா, அருணா செளதரி ஆகியோரும், தலித் சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்
  கின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai