சுடச்சுட

    

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
    இதுகுறித்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
    பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணா காட்டி நகரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும்வகையில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    88 மி.மீ. மோர்ட்டார் ரக பீரங்கிகளையும், தானியங்கி ஆயுதங்களையும் பயன்படுத்தி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, அவர்களுக்கு நமது படை வீரர்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்தனர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai