சுடச்சுட

  

  பொது இடங்களில் புகைப் பிடிப்போர் மீது நடவடிக்கை: ஒரே மாதத்தில் 700 பேருக்கு அபராதம்

  By தில்லி  |   Published on : 13th March 2017 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  smoke

  தில்லியில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தில்லி காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பான சட்டத்தின் மூலம் ஒரே மாதத்தில் 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  தில்லியல் பொது இடங்களில் புகைப் பிடிப்போருக்கு எதிரான நடவடிக்கையை தில்லி காவல் துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்தில் "சிகரெட் மற்றும் இதர புகையிலைத் தயாரிப்புகள் சட்டத்தின்' (சிஓடிபிஏ) கீழ் 700-க்கும் மேற்பட்டோருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இச்சட்டத்தின்படி பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள், கடைகளில் சிறார்களுக்கு புகையிலைப் பொருள்களைப் விற்பவர்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 கஜம் தூரத்திற்குள் புகையிலைப் பொருள்களை விற்பவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் போது காவல் துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது வழங்குவர். அபராதம் விதிக்கப்பெற்ற நபர்கள், அந்தத் தொகையை நீதிமன்றத்திற்கு நேரில் சென்று செலுத்த வேண்டும்.

  சிஓடிபிஏ சட்டம் மூலம், குற்றம் கண்டறியப்பட்டதும் சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் போலீஸாரின் நடவடிக்கையின்படி கிழக்கு தில்லி மண்டலத்தில் மட்டும் இதுவரை விதிகளை மீறிய 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 5 முதல் 7 பேர் பிடிபடுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

  மேலும், கிழக்கு தில்லியில் 5 "ஹுக்கா பார்'கள் மூடப்பட்டுள்ளன. தில்லி வட மாவட்டத்தில் இதுவரை விதிமீறலில் ஈடுபட்டதாக 263 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  தென்கிழக்கு மாவட்ட போலீஸார் சிஓடிபிஏ சட்டத்தின் கீழ் 250 பேருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

  பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களைத் தடுக்கும் வகையில் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் தில்லி காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai