Enable Javscript for better performance
போதை மருந்துப் பிரச்னைக்கு தீர்வு காண சிறப்புப் படை: அமரீந்தர் சிங்- Dinamani

சுடச்சுட

    

    போதை மருந்துப் பிரச்னைக்கு தீர்வு காண சிறப்புப் படை: அமரீந்தர் சிங்

    By DIN  |   Published on : 13th March 2017 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amrinder

    பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சிறப்புப் படை அமைக்கப்படும் என்று அந்த மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
    பஞ்சாப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது.
    இந்த நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற, காங்கிரஸ் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
    சட்லெஜ் - யமுனா இணைப்புக் கால்வாய் விவகாரத்தைப் பொருத்தவரை, பஞ்சாபிடம் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதைப் பொருத்தே ஹரியாணாவுக்கு தண்ணீர் வழங்குவது குறிதது முடிவெடுக்கப்படும்.
    பஞ்சாபில் 60 சதவீத விளைநிலங்கள் உள்ள நிலையில், 8 மெட்ரிக் ஏக்கர்-அடி அளவே தண்ணீர் உள்ளது. ஆனால் ஹரியாணாவில் 40 சதவீதம் மட்டுமே விளைநிலங்கள் உள்ள நிலையில், 12 மெட்ரிக் ஏக்கர்-அடி நீர் உள்ளது. மாநிலத்தின் தொழிற் கொள்கையை மிகத் தாராளமாக்கி, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவோம்.
    போதை மருந்துப் பிரச்னைக்கு தீர்வு காண, சிறப்புப் படை அமைக்கப்படும்.
    பஞ்சாபில் ஆம் ஆத்மிக் கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு உள்ளது என்ற மாயையை, தேர்தல் முடிவுகள் அகற்றியிருக்கின்றன.
    ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், முந்தைய அரசின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்.
    பஞ்சாப் மாநிலத்தின் நிதி நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. எனினும், எப்பாடுபட்டாவது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai