சுடச்சுட

    

    மணிப்பூரில் ஆட்சியமைக்கிறது பாஜக? ஆளுநரை சந்திக்க முடிவு

    By DIN  |   Published on : 13th March 2017 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manipur

    மணிப்பூரில் ஆட்சியமைக்க போதிய பலமில்லாத போதிலும் பிற கட்சிகளின் ஆதரவுடன் அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
    மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களையும், பிற கட்சிகள் 11 இடங்களையும் கைப்பற்றின. எனினும், எந்தக் கட்சிக்கும் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் (33 இடங்கள்) கிடைக்கவில்லை.
    இதனிடையே, மணிப்பூரில் ஆட்சியமைப்பதற்காக அங்கு பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிற சிறிய கட்சிகளிடம் பாஜக ஆதரவு கோரி வருகிறது. இதையொட்டி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முகாமிட்டுள்ளனர்.
    இந்நிலையில், தலா 4 இடங்களில் வெற்றி பெற்ற மணிப்பூரின் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.), நாகா மக்கள் முன்னணி (என்.பி.எஃப்.) ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தருவதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
    இதன் தொடர்ச்சியாக, ஓரிடத்தில் வெற்றி பெற்ற லோக் ஜன சக்தியும் (எல்ஜேபி) தனது ஆதரவை பாஜகவுக்கு வழங்கியது. இதனால் பாஜகவின் பலம் 30-ஆக உயர்ந்தது. இந்தச் சூழலில், திடீர் திருப்பமாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வான ஷியாம்குமார் சிங் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இணைந்தார். இதனால், மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் (31) பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
    இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை பாஜக தலைவர்கள் திங்கள்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai